அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய சீன அமைச்சர்

சீனா: சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் பேச்சு நடத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகப் பொருளாதார சவால்களை சந்திக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன் இருந்தனர்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ள வாய்ப்புள்ள சூழலில், ஜோ பைடனை சந்தித்த சீன அமைச்சர், இரு தரப்பு உறவையும் மேம்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.