ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே மோதல்

ஜம்மு: மாணவர்கள் காயம்... தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

திரைப்படம் குறித்த ஆட்சேபகரமான பதிவை வாட்ஸ்அப் குழு ஒன்றில் மாணவர் ஒருவர் பகிர்ந்ததையடுத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மோதலின் போது கல்லூரி விடுதிக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் உறுதி அளித்துள்ளார்