பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவு .. 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் 1,48,811 இடங்களை நிரப்ப பொறியியல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.

மேலும் அதில் கலந்து கொண்டவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று (செப்.27) நடைபெற்றது. அதில் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

இதை அடுத்து மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை ஒரு வாரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இனி வருகிற நாட்களில் மற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தாமதிக்காமல் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.