மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு

மணிப்பூர் : மணிப்பூரில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருவதால், இணைய சேவைகளுக்கு தடை மேலும் நீட்டிப்பு .... மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி உள்ளனர்.

ஆனால், குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இரண்டு தரப்பு மக்களுக்கும் இடையில் கடந்த மாதம் கடும் மோதல் ஏற்பட்டது.

மணிப்பூரில் துணைராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், கலவரம் இன்னும் குறைந்தபாடில்லை.

எனவே, மணிப்பூர் அரசு கடந்த மாதம் முதல் அங்கு இணைய சேவைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வருகிற ஜூலை 5ம் தேதி வரை இறுதியாக அறிவிக்கப்பட்ட உத்தரவு தற்போது மேலும், நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இணைய சேவை தடை செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.