காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,272 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,272 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,395 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 925 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொது ஊரடங்கை ஜூலை 31-,ம் தேதி வரை நீடித்துள்ளது.