புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8,047-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,506 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 7,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 6,977 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,047-ஆக உயர்ந்துள்ளது.