வேலூர் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 4,379 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 4,379 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,496 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 3,213 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.