இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 1 கோடியே 69 லட்சத்து 01 ஆயிரத்து 407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 6 லட்சத்து 63 ஆயிரத்து 557 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், பரிசோதனை அதிகரிப்பதால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 771 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 03 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11.86 லட்சம் பேர் கிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.79 லட்சத்துக்கும் அதிகமானோர் நாடுமுழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை 38,135 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.