இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா கருவிகள் டெல்லியில் பரிசோதனை

டெல்லியில் பரிசோதனை... 30 வினாடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கும் வகையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிய 4 தொழில்நுட்பங்கள், டெல்லியில் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள், டெராஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்காப்பி (terahertz spectroscopy) தொழில்நுட்பம், ஐசோதெர்மல் டெஸ்ட் (isothermal test), பாலி அமினோ ஆசிட்ஸ் முறை (poly amino acids) , பேச்சு அடிப்படையிலான பரிசோதனை ஆகிய 4 தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த 4 தொழில்நுட்பங்களும், டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.

வழக்கமான பரிசோதனை போல இல்லாமல், ப்ரீதலைசர் (breathalyser) போன்ற கருவி முன் ஊதினாலோ அல்லது பேசினாலோ மாதிரியை சேகரித்து கொண்டு பரிசோதிக்கும் வகையிலான தொழில்நுட்பம் இவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.