உலக நாடுகளில் மீண்டும் வீரியம் காட்டும் கொரோனா

இந்தியா: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் அது பற்றிய துல்லியமான தகவல்களை தர வேண்டும் என WHO தெரிவிப்பு ...உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா, இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. தற்போது அதன் வீரியம் குறைந்து இருந்தாலும் முற்றிலுமாக அதிலிருந்து மக்கள் மீள முடியாது.

இந்த நிலையில் உலகில் பல பகுதிகளில் கொரோனா மரணங்களும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அது குறித்து துல்லியமான தகவல்களை உலக நாடுகள் தர வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து இது குறித்து WHO அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதானோம் கூறுகையில், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்புகள் உயர்ந்து இருக்கிறது. அதே போன்று ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அதிகமான மக்கள் சேர்க்கப்படுகின்றனர்.

மேலும் குளிர் காலம் வருவதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறந்தவர்கள் குறித்து துல்லியமான தகவல்களை உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.