கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே சென்னையில் 10-15% அளவிற்கு கொரோனா பரவல் உயர்வு

சென்னை: நேற்று மட்டுமே மராட்டிய மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2000பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே சென்னையில் 10-15% அளவிற்கு கொரோனா பரவல் உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் கூட தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

BA 4, BA 5 போன்ற கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட அஜாக்கிரதையாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் மற்றும் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவி வரும் வேளையில் கட்டாயமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.