இந்தியாவில் கொரோனா பரவல் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் உயர்வு

இந்தியா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து நேற்று மட்டும் 11,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள தமிழகம், டெல்லி உத்திர பிரதேசம், ஹரியானா கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஏப்ரல் 3 – வது வாரத்திலிருந்து 11 மாவட்டங்களில் கொரோனா விகிதம் 10% மேல் இருப்பதை சுட்டிக்காட்டிவுள்ளது.

அதனால் மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். உடனடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து அத்துடன் தற்போது அதிகம் பரவும் இன்புளுயன்சா மற்றும் சுவாச கோளாறு நோய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.