ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை; கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தம்

கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து கந்தர்வகோட்டை இந்தியன் வங்கி சேவைகள் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மை தினங்களாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே கந்தர்வகோட்டை இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை இன்றிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக வங்கி சேவைகள் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின் வங்கி சேவைகள் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.