கொரோனா பாதிப்பு குறைகிறது... டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டார் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது குறைந்து வருகிறது என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

இது மிகவும் நல்ல செய்தி. கொரோனா வைரஸ் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. எனினும் சில இடங்களில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினை உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி அமெரிக்காவில் 1,486,376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 89,549 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் அங்கு தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கின்ற நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 865பேர் உயிரிழந்தனர். தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்ற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 19,891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.