கனடாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 66 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 66பேர் உயிரிழந்ததோடு, 609பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,703ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,335ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,064பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 52,568பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயின்: ஐரோப்பாவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த 24 மணிநேரத்தில் 318 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய ஸ்பெயினில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 288,058 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,134 ஆக அதிகரித்துள்ளது.