சென்னையில் 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை : சென்னையில் மெரினா கடற்கரை தான் மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.மேலும் இங்கு வருகிற மக்களுக்காகவே அலங்கார பொருட்கள், ஸ்நாக்ஸ், விளையாட்டு பொருட்கள், சிற்றுண்டி, குளிர்பானம், துரித உணவகம் என கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது..


எனவே இந்நிலையில் மெரினா கடற்கரையை 2.0 திட்டத்தின் கீழ் உலக தரத்துக்கு சீரமைக்க போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதே சமயம் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்க்காக அழகுபடுத்துவதற்கு மட்டுமே ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று மெரினா கடற்கரையில் செயல்பட்டு வரும் தள்ளுவண்டி கடைகளால் தான் மெரினா கடற்கரையின் அழகே போய் விட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த தள்ளுவண்டி கடைகளை முறையாக ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கடைகளை வரிசையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மெரினா கடற்கரையில் 900 ஸ்மார்ட் கடைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.16.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கடைகளை பெறுவதற்கு மட்டும் 14 ஆயிரத்து 827 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஸ்மார்ட் கடைகளை குலுக்கல் முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்மார்ட் கடைகள் பெற முன்வரும் வியாபாரிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும்படியும் சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.