யூடியூபர் டிடிஎஃப் வாசனின் காவலை 4-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு

சென்னை:காவல் 4-வது முறையாக நீட்டிப்பு ... பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது.

மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்தது. இதற்கு இடையே டிடிஎஃப் வாசன் 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் காவலை வருகிற நவம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவ்ர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 4-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.