அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில்பாலாஜியை ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜியை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்காக காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் இணைய தள நகலை அமலாக்கத்துறை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமலாக்கத்துறையினர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

வரும் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி தந்திருந்தது உச்சநீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.