பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்

இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்... பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

ஊரடங்கு நிலை, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகை உறைய வைத்துள்ள கொரோனாவால் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியும், ஊரடங்கும்தான் சாத்தியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கியதை அடுத்து இந்தியாவில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

முதலில் 21 நாட்கள் முழு அடைப்பை பின்பற்றினாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து ஏப்.14 முதல் மீண்டும் (மே.3 ம் தேதி) வரை 18 நாட்களுக்கும்,மேற்கூறிய 2 அறிவிப்புகளையும் பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து மே 4 ம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய சுகாதார துறை அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி நேற்று (11ம் தேதி ) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்தார். இதனையடுத்து இன்று (12 ம் தேதி ) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றுகிறார்.

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பஸ் போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.