புதுச்சேரியில் மீண்டும் அமலாகும் கெடுபிடிகள்

புதுச்சேரி: மீண்டும் முகக்கவசம், சமுக இடைவெளி ...பருவ மழை காலங்களில் பல்வேறு விதமான நோய்களும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெங்கு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல்கள் போன்ற தொற்றுகள் சமீபத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி கொண்டு வருகிறது.

எனவே இதன் காரணமாக புதுச்சேரி சுகாதாரத்துறை பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் காய்ச்சல் பரவல் தடுப்பிற்காக மக்கள் புதுச்சேரியில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளது.


மேலும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் காய்ச்சல், சளி. இருமல் மற்றும் சுவாச சிரமம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படும் பட்சத்தில் அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகுமாறும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் எனவும், மக்கள் முறையான கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றை மேற்கொண்டு நோய்களை பரவாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் போதுமான அளவு மருந்துகள் நோய் தொற்றுகளை கையாள்வதற்கு கைவசம் உள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமலு தெரிவித்து உள்ளார்.