சென்னையில் உயரும் டெங்கு


சென்னை: உயரும் டெங்கு ... சென்னையில் பருவமழை வெளுத்து வாங்கி ஓய்ந்துள்ள நிலையில், ஏகப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்நோய் ஆகிய நோய்கள் பரவி வருகின்றன. மேலும் பல குழந்தைகளுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது. மழை முடிந்துள்ள நிலையில் வீடுகளை சுற்றி தேங்கி இருக்கும் மழை நீர் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள் மேற்க்கொண்டு வருகின்றன. மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் 84383 53355 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தினமும் பதிவாகும் காய்ச்சல் தொடர்பான தகவல்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.