தமிழகம் மற்றும் புதுவையில் ஜன.13 முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2022 நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் சில நாட்களாகவே கடும் குளிர் நிலவி கொண்டு வருகிறது. மேலும் அத்துடன் சில மாவட்டங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர் பனி மூட்டம் நிலவி கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி வரை குறைவாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறை பணிக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்‌ ஆக இருக்கும் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்‌சியஸ்‌ என்ற அளவில்‌ இருக்கக்கூடும்‌. மேலும் காலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.