வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், இங்கு அரசு அலுவலங்கள் செயல்படும் நேரம் மாற்றம்

பஞ்சாப் : நடப்பு ஆண்டில் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. இதனை வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

இதையடுத்து வழக்கமாக அரசு அலுவலகங்கள் காலை 9 அல்லது 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் தேவை அதிக அளவில் உள்ளது.

எனவே இதனை தவிர்க்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து அதன்படி, மே 2-ம் தேதி முதல் ஜூலை 15- ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் காலை 7:30 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும்,

எனவே இதன் மூலம் பொதுமக்கள் வெயில் அதிகமாவதற்கு முன்பாகவே தங்கள் அரசு அலுவலக வேலைகளை முடித்துக் கொள்ளலாம் எனவும், மேலும், இதனால் 300 முதல் 350 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.