வங்கதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம்

வங்கதேசம் : ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு ....... வங்கதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , பங்களாதேஷின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபால்கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகிவு ள்ளது. 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக இதுவரை தகவல் இல்லை.