விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மின் விநியோகம் தடை

விருதுநகர் : மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று கொண்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் முன்னரே அறிவிக்கப்படும்.அதன்படி நாளை ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. அதாவது விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த பணியின் காரணமாக அங்குள்ள சில பகுதிகளில், மின் விநியோகம் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார். பி. எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.யு.சி. நகர், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கலங்காபேரி புதூர், மொட்ட மலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், லட்சுமிபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை என தெரிவிக்கப்ட்டுள்ளது.