மதுரையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மின் விநியோகம் தடை

மதுரை: தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சார விபத்துகள் ஏற்படுகிறது. அதை தடுக்க மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாளில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அந்த பகுதிகளின் விவரங்களை பற்றி மின்சார வாரியம் முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு ஒன்றை வருகிறது.அதன்படி மதுரையில் ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

எனவே இதன் காரணமாக நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார் காலனி, சங்கீத் நகர், சொக்கலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை.

மேலும் கூடல்நகர் 1 முதல் 15 தெருக்கள், வானொலி நிலைய மெயின்ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்கபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.