மனித உருவிலான ரோபோவை காட்சிப்படுத்திய எலன் மஸ்க்

கலிபோர்னியா: மனித உருவிலான ரோபோ... அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெஸ்லா சிஇஓ எலன் மஸ்க் மனித உருவத்தினாலான ரோபோவை காட்சிப்படுத்தினார்.

டெஸ்லா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, பெட்டியை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, உலோக பொருட்களை எடுத்து வைப்பது போன்ற பணிகளை செய்கிறது.

ஆப்டிமஸை செம்மைப்படுத்த இன்னும் பல பணிகள் செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்த எலன் மஸ்க், தங்கள் இலக்கு விரைவில் பயனுள்ள மனித உருவ ரோபோவை உருவாக்குவதான் என்றும் கூறினார்.

அத்தோடு, ரோபோ வணிகம் கார்களை விட அதிக மதிப்புடையதாக இருக்கும் என்றும் எலன் மஸ்க் தெரிவித்தார்.