ஊழியர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை

ஆந்திர : ஆந்திர மாநிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பணி நேரத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாநிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை மணிக்கணக்கில் பயன்படுத்துகின்றனர். இதனால் அன்றாட வேலை பாதிப்படைகிறது. இதையடுத்து சிறிய வேலையை முடிப்பதற்கு அதிக கால நேரத்தை ஊழியர்கள் எடுத்து கொள்கின்றனர்.

எனவே இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லையாக இருக்கும். அதனால் இதை தடுக்கும் விதமாக தற்போது கணினி பயன்பாட்டாளா்கள், ஆவண உதவியாளர்கள், தட்டச்சாளா்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மதிய உணவு நேரம், இடைவேளையில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.