வேலூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் : வேலைவாய்ப்பு முகாம் ... தமிழகத்தில் நாளை மருத்துவ உதவியாளர்‌ மற்றும்‌ ஓட்டுனர்‌ பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்‌ வேலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை அரசு வழங்கி வருகிறது. தற்போது இதில் மருத்துவ உதவியாளர்‌ மற்றும்‌ ஓட்டுனர்‌ பணியிடத்தில் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

இதையடுத்து இந்த முகாம் வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறையில் இருக்கும் அரசு மருத்துவக்‌ கல்லூரி வளாகத்தில் காலை 10 முதல்‌ 2 மணி வரை நடைபெற இருக்கிறது.
இம்முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்கள்‌, தங்களுடைய கல்விச்சான்றிதழ் மற்றும் பணி அனுபவம்‌ பெற்றுள்ள சான்றிதழ் தொடர்பான அனைத்து அசல்‌ சான்றிதழ்களையும்‌ கொண்டு வரவேண்டும்‌. இதில் ஓட்டுநர் பணியிடத்திற்கு ஓட்டுநர் உரிமம் கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.


ஓட்டுநர் பணியிடத்திற்கான தகுதிகள்: கல்வி தகுதி : ஓட்டுநர் பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 24 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
பாலினம்‌: ஆண்‌ மற்றும்‌ பெண்‌.
மாத ஊதியம் : ரூ.15,235
மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான தகுதிகள்
கல்வி தகுதி : B.Sc நர்ஸிங் / DGNM / ANM / DMLT ஆகியவற்றில் '
ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.வயது வரம்பு : 19 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
பாலினம்‌: ஆண்‌ மற்றும்‌ பெண்‌.
மாத ஊதியம் : ரூ.15,435