குண்டூசி முனையளவு இந்திய மண்ணை கூட அபகரிக்க முடியாது

அருணாச்சல்: உள்துறை அமைச்சர் சூளுரை... அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டி சொந்தம் கொண்டாடும் நிலையில், குண்டூசி முனையளவு கூட இந்திய மண்ணை எவராலும் அபகரிக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி பணிகளுக்கும், அதன் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் அருணாச்சல பிரதேசத்தின் கிபித்தூ என்ற கிராமத்தில் Vibrant Villages திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு வரை வடகிழக்கு பகுதி அமைதி குலைந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் 'லுக் ஈஸ்ட்' கொள்கை மூலம், அப்பகுதி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், ராணுவமும், இந்தோ - திபெத் எல்லைக்காவல்படை வீரர்களும் எல்லையில் இரவும் பகலும் கண்காணிப்பதால் நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்க முடிவதாக தெரிவித்தார்..