மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு .... 100 யூனிட் இலவசம் மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் என இலவச மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதாருடன் இணைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தொடங்கியது. இதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 எனஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலானோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததன் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்னும் பலர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதுவரை 90% மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்று நுகர்வோர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், மின் இணைப்புடம் ஆதார் எண்ணை இணைக்க வருகிற பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காததால் வழங்கப்பட்டுள்ளது.