பிரபல 10 ரூபாய் டாக்டர் மரணம்..பொதுமக்கள் கவலை..

சிதம்பரம்: அசோகன், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிதம்பரம் நகரத்தில் மட்டும் அல்லாமல், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மருத்துவம் பர்ர்த்து வந்தார். இவரை பொதுமக்கள் 10 ரூபா டாக்டர் என்றாய் அன்புடன் அழைத்து வந்தார்கள். இவரை எந்த பகுதியில் இறங்கி 10 ரூபாய் டாக்டர் என கேட்டால்,இவரை கைக்காட்டி விடுவார்கள்.
கடந்த கொரோனா கால கட்டத்திலும் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையிலும், இவர் மக்களுகாக பணியாற்றி வந்தார் என்று குறிப்பிடத்தக்கது. இவர் வாடகை கட்டிடத்தில் தான் இவரது மருத்துவமனை இயங்கி வந்தது. இவரின் சேவையை மதிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

இவர் வெளி ஊரில் இருந்து வரும் மக்களுக்கும் அவரது மருத்துவமனயில் தங்க வைத்து மருத்துவம் பார்பார். அது மட்டும் அல்லாமல் இவர் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பார். இஞ்சி சாறு, கஷாயம் என அனைத்தையும் இலவசமாக கொடுப்பார். இவர் மருத்துவமனைக்கு தினம் 100 பேர் வந்து செல்வார்கள், கை ராசி ஆனவர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தாலும் இதுவரை சொந்த இடம் இல்லாமல் வாடகை இடத்தில் மருத்துவம் பார்த்து வந்தார். மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு சில நேரம் இலவசமாக மருத்துவம் பார்பார் கட்டயாபடுத்த மாட்டார்.
இந்நிலையில் மருத்துவர் அசோகன் நேற்று மாலை தீடீர் என மாரடைப்பால் உயிர் இழந்தார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவருக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.