கொரோனாவால் பாதித்த நாடுகளுக்கு உதவ நிதி திரட்டிய பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள்

கொரோனா நிதி திரட்டிய ஹாலிவுட் நட்சத்திரங்கள்... பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், பாடகர்கள் இணைந்து, 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக, 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.

'குளோபல் சிட்டிசன்' என்ற அமைப்பின் மூலம், கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு உதவுவதற்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதை, பிரபல ஹாலிவுட் நடிகர், டுவானே ஜான்சன் தொகுத்து வழங்கினார். 'ஆன்லைன்' வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில், ஜெனிசப் ஹட்சன், மில்லி சைரஸ் உட்பட பல இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, எல்சல்வடார், ஸ்வீடன், தென்னாப்ரிக்கா, பார்படாஸ் உள்பட பல நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், 11.34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, உடனடியாக திரட்டப்பட்டது. இதைத் தவிர, 40.83 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி திட்டங்கள் வழங்க, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவை உறுதி அளித்துள்ளன.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததும், 25 கோடி 'டோஸ்' மருந்து, இந்த நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.