பள்ளிக்கூடங்களை அடுத்த 2 மாதத்தில் திறக்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் , உடனடியாக பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன செய்யலாம் என அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அங்கிதா கர்வால் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், பள்ளி பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும், பள்ளி பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாடத் திட்டம் முதலில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகியவற்றில் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறும் கருத்துக்களை கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2வில் சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. அவற்றை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிக்கூடங்களை அடுத்த 2 மாதத்தில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.