நாயை விழுங்கி சுருண்டு கிடந்த மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பழனி மலை அடிவாரத்தில் நாயை விழுங்கியபடி சுருண்டு கிடந்த மலைப்பாம்பினை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக மீட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் 15 அடி மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கியுள்ளது. ரோப்கார் நிலையம் அருகே மரங்கள் நிறைந்துள்ள பகுதியில் 15 அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் நாயை விழுங்கியபடி இருந்த மலைப்பாம்பினை லாவகமாக மீட்டனர்.

பின்னர், மலைப்பாம்பினை வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து, வனப்பகுதிக்குள் மலைப்பாம்பு விடப்பட்டது.