தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

சென்னை: அருவிகளில் குளிக்க தடை ... வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம், புலி அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.