காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி


இந்தியா: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ...காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சோனியா காந்தி சிறிது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சிகிச்சைக்கும் பின்னர் அவர் வீடு திரும்பி ஓய்வு பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.