தேவேகவுடாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நன்றி

கர்நாடகாவில் வரும் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு 2 இடமும், காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் உள்ளது. 4வது இடத்தில் வேறு எந்த கட்சிக்கும் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினார். இதனால் தேவேகவுடா மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் முழு ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தேவேகவுடா மனு தாக்கல் செய்த பின் அவரது மகன் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தள்ளாத வயதில் மாநிலங்களவைக்கு போக தேவேகவுடா விரும்பவில்லை. அழுத்தம் வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். தேவேகவுடாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தேவேகவுடா மனு தாக்கல் செய்துவிட்டு வந்துகொண்டிருந்த போது, எதிரில் வந்த மந்திரி சி.டி.ரவியை பார்த்து வணக்கம் தெரிவித்து, உங்கள் கட்சி வேட்பாளர்கள் இன்னும் மனுதாக்கல் செய்யவில்லையா, அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள் என்று கூறினார். அதற்கு சி.டி.ரவி வணக்கம் தெரிவித்து, உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறிவிட்டு சென்றார்.