மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்

மகாராஷ்டிரா: கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் ... உலகளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. சாலை விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் ஏகப்பட்ட உயிர்களை நாம் இழந்து கொண்டு வருகிறோம். அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால் சாலை விபத்துகள் அதிகம் தவிர்க்கப்படும்.

இதனை அடுத்து மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை மாநகரில் இனி கார்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தகுந்தாற் போல அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களுடைய கார்களில் சீட் பெல்ட் வசதியை சரியாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள், பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்களை கட்டாயம் சீட் பெல்ட் அணிய வலியுறுத்த வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை பின் பற்றாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.