இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக பெறப்பட மாட்டாது

சென்னை: குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் வழக்கம் போன்று இயங்கும், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் இன்று முதல் செயல்படாது.

குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது.


இதனை அடுத்து சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக பணம் செலுத்தலாம்.

UPI, QR குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம் என ஆதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.