விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது!

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்துள்ளது.

மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். அத்துடன், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வழக்கமான விஷேச பூஜைகள், பிரசாதம் இன்றி சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. உடல்வெப்ப நிலை பரிசோதனைக்கு பின் மாஸ்க் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்படுகின்றனர்.