தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர் படிப்பிற்காக மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அரசு அறிவிப்பு

தமிழகம்: கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசின் சார்பில் பலவிதமான நன்மை தரக்கூடிய நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக அதாவது அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 1000 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே செல்வதால் அரசு பள்ளிகளிலேயே ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் வேறு ஏதேனும் கல்வி உதவித்தொகை வாங்கிக்கொண்டு இருந்தாலும் கூடுதலாக அரசின் இந்த உதவித் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி தொகையாக ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவிகளின் சான்றிதழ்களை கல்வி முதல்வர்கள் பெற்று ஒப்படைக்குமாறு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வாறு பெறப்பட்ட மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து தகுதியான அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் இனிவரும் ஆண்டுகள் முழுக்க ரூ.1,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.