மக்களின் எரிபொருள் செலவை குறைக்க கனடா அரசு உதவி வழங்க முடிவு

கனடா: எரிபொருள் செலவை குறைக்க உதவி... கனடாவில் மக்களின் எரிபொருள் செலவினைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.

கனடாவின் மக்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமாக்கிக் கொள்வதற்கு வினைத்திறனான மாற்று சக்தி வளம் பயன்படுத்துவொருக்கு அரசாங்கம் உதவு தொகை வழங்க உள்ளது.

சுமார் ஐந்தாயிரம் கனேடிய டொலர்கள் வரையில் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வீடுகளை வெப்பமாக்கிக் கொள்ள எண்ணெய் தாங்கிகளையும் ஹீட் பம்புகள் வினைத்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பான முறையில் எண்ணெய் தாங்கிகளை அகற்றவும் ஹீட் பம்புகளை பொருத்தவும் இவ்வாறு உதவித் தொகையை அரசாங்கம் வழங்க உள்ளது. இவ்வாறு எண்ணெய் தாங்கிகளை மாற்றுவதால் ஆயிரக் கணக்கான டாலர்களை வருடாந்தம் சுமிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.