தமிழக பள்ளி வாகனங்களின் சிசிடிவி கேமரா,எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் என அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும் பிற குற்றங்கள் நிகழாத வகையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது கொண்டு வருகிறது.

மேலும், தற்போது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினரே பேருந்துகளில் அழைத்து சென்று வீடுகளில் விடுகின்றனர். இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து தற்போது பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறம் எச்சரிக்கை சென்சார் கருவியை பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.