உலகிலேயே மிகக் காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை

கலிபோர்னியா: உஷ்... ஆ... என்று சின்ன பீஸ் மிளகாயை கடித்து விட்டாலே கதறிவிடுவோம். ஆனால் இளைஞர் ஒருவர் உலகிலேயே மிகக் காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர் என்பவர்தான். இவர் 10 கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் உண்டு சாதனை படைத்துள்ளார்.

நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 184 SHUஆகும். என்னங்க கேட்கும் போதே தலையை சுத்துதா.

இந்த மிளகாய்களை அதுவும் மிக குறைந்த நேரத்தில் தின்று முடித்து சாதனை செய்து இருக்கார்ன்னா பார்த்துக்கோங்க. அதுவும் கின்னஸ் ரெக்கார்டுங்க.