தமிழகத்தில் வருகிற நவ.8 வரை கனமழை நீடிக்குமாம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. சென்னை மாநகரைவிட, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து உள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 11-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து நாளை மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஏன் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.