டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை

புதுடெல்லி: டெல்லியில் நேற்று 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நேற்று 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் வரலாறு காணாத 153 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனால் டெல்லி வாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட் செய்ததாவது, மொத்த பருவமழையில் 12 மணி நேரத்தில் 15 சதவீதம் பெய்துள்ளது, இது ஜூலை 1982 க்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

அனைத்து அமைச்சர்கள் மற்றும் டெல்லி மேயர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தங்களது ஞாயிறு விடுமுறையை ரத்து செய்துவிட்டு உடனடியாக களத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.