பீகார் மாநிலத்தில் கனமழை; கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் பலி

கனமழையால் 83 பேர் பலி... பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாயினர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா, மற்றும் பாங்கா மாவட்டங்களில் தலா 5 பேரும் பலியாகி உள்ளதாக தெரிவித்து உள்ளன.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் , இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது. இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலியான 83 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என கூறி உள்ளார்.