ஐபோன் பயனர்களுக்கு WHATSAPP ன் சூப்பர் அப்டேட் இதோ

இந்தியா: வாட்ஸ் அப்பின் சேனல் அம்சம் தற்போது ஐபோன் பயனர்களுக்கும் கிடைத்துள்ளது . ...WHATSAPP செயலி தனது பயனர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தான் சேனல் என்ற புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. எனவே இதன் மூலமாக தங்களை பின்தொடரும் பாலோயர்ஸ்களுக்கான தகவல்களை பகிர்ந்து கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. இதன் மூலமாக வாட்ஸ் அப் கணக்கின் வாயிலாக தங்கள் பாலோயர்ஸ் உடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு உதவிகரமாக இருந்து கொண்டு வருகிறது.

வாட்ஸ் அப்பில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே முன்னதாக கிடைத்து வந்தது. ஐபோன் பயனர்களுக்கு கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் மட்டுமே இந்த அம்சம் கிடைத்தது. இதையடுத்து தற்போது WHATSAPP தனது புதிய அப்டேட்டின் வாயிலாக ஐபோன் பயனர்களுக்கும் சேனலை உருவாக்கும் வம்சத்தை வழங்கியுள்ளது.

எனவே இதற்கு நீங்கள் சமீபத்திய வாட்ஸ் அப்பின் பதிப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்கள் மொபைலில் சேனல் உருவாக்கும் அம்சம் கிடைக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்காக அப்டேட்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது கிரியேட் சேனல் என்ற அம்சம் இருந்தால் உங்களால் புதிய சேனலை உருவாக்க முடியும். இன்னும் சில பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை. இவர்களுக்கு வரவிருக்கும் அப்டேட்ஸ்களின் வாயிலாக சேனலை உருவாக்கும் அம்சம் வழங்கப்படும் என வாட்ஸ் அப் செயலி தெரிவித்து உள்ளது.