ஹுவாய் நிறுவனம் தனது ஹானர் ஸ்மார்ட் போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவிப்பு

விற்பனை செய்வதாக அறிவிப்பு... சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் ஹானர் பிராண்டை மட்டும் விற்பனை செய்துவிட்டு, ஹூவாய் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஹூவாய் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.